தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
383

தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்களின்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:

தமிழ்நாடு அரசின் அரசு மருத்துவமனைகள்  மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2015ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் Medical Services Recruitment Board மூலம் வைக்கப்பட்ட தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் MRB செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக 04/05/2022 ஆம் தேதி  அன்று கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்களின்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், DINDIGUL DISTRICT

2015 மற்றும் 2019  ஆண்டுகளில் Medical Services Recruitment Board மூலம் சுமார் 12 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.  ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் இரண்டு ஆண்டுகள் அல்லது நிரந்தர பணியிடம் உருவாகும் வரை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்று அப்பாயின்மென்ட் ஆர்டரில் குறிப்பிட்டிருந்தது.  ஆனால் இதுவரை தோராயமாக சுமார் 4000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப் பட்டுள்ளனர் மீதம் இருக்கும் சுமார் 8000 செவிலியர்கள் இன்னும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 

இந்த பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே 2017ஆம் ஆண்டு டிஎம்எஸ் அலுவலகத்தில் மூன்று நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது அந்தப் போராட்டத்தின் முடிவில் தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியமானது 7 ஆயிரத்து 700 ரூபாயில் இருந்து 14 ஆயிரம் ரூபாயாக மாற்றி அமைக்கப்பட்டது.  அதேபோல்  2021 ஆம் ஆண்டு சென்னையில் எழிலகம் அருகே  ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக் போராட்டம் செய்தனர் அந்த போராட்டத்தின் முடிவில் சில கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உத்தரவாதம் தரப்பட்டது. அதில் வழங்குவதாக சொல்லப்பட்ட சில கோரிக்கைகள் கீழே கொடுக்கிறோம்.

  1.  நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படுவது போல் அரசு விடுமுறை நாட்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்.
  2.  நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

 ஆனால் இந்த மகப்பேறு  விடுப்பு சில மாவட்டங்களில்  ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது மேலும் சில மாவட்டங்களில் இன்னும் ஊதியம் இல்லாமல் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

விரக்தியில் ஒப்பந்த செவிலியர்கள்:

ஒப்பந்த செவிலியர்கள் ஏற்கனவே இரண்டு முறை போராட்டம் நடத்தியும் இன்னும் பணிநிரந்தரம்  செய்யப்படவில்லையே என்று ஆதங்கத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் தங்களது தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம்(NO. 356) என்று குறிப்பிட்டிருந்தது

READ MORE  Useful Notes For Nursing Competitive Exams

இந்நிலையில் ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொகுப்பூதிய செவிலியர்கள் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள  தங்களின் பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும்  04/ 05/2022 ஆம் தேதி அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எம்ஆர்பி செவிலியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் கலந்து கொண்டது அரசு ஊழியர் சங்கத்தின்  சார்பாக அதன் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு ஆதரவளித்தனர்.

மேலும் தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்களின்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தீர்வு ஏதும்  கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று செவிலியர் சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.


எம்ஆர்பி செவிலியர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தர கோரிக்கை விரைவில் நிறைவேற MRB NURSES MEMES  வலைத்தள பக்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

More Information: Check Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here