எம் ஆர் பி செவிலியர்கள் நலச் சங்கத்தினர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருடன் சந்திப்பு

0
633
எம் ஆர் பி செவிலியர்கள்

எம் ஆர் பி செவிலியர்கள் நலச் சங்கத்தினர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருடன் சந்திப்பு

அனைத்து தமிழக அரசு எம் ஆர் பி செவிலியர்களுக்கு வணக்கம்,

எம் ஆர் பி செவிலியர்கள் நலச் சங்கத்தின் சார்பாக 02.06.2021 அன்று  மாலை 6 மணியளவில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.அம்பேத்கர் கணபதி-செஞ்சி, மாநில ஒருங்கிணைப்பாளர் திரு‌.வேல்.மோகன்தாஸ்-இராமநாதபுரம்,சென்னை மாவட்ட செயலாளர் திருமதி.நிரோஷா மற்றும் திருமதி.சுப்புலட்சுமி ஆகியோர் அடங்கிய குழு மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அவர்களை சந்தித்து எம் ஆர் பி செவிலியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து கோப்புகளை வழங்கினர்.

எம் ஆர் பி செவிலியர்கள் நலச் சங்கத்தினர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருடன் சந்திப்பு ஆர் பி செவிலியர்கள்2
MRB NURSES WELFARE ASSOCIATION

கோரிக்கைகள்:

பின்வரும் கோரிக்கைகள் எம் ஆர் பி செவிலியர்கள் நலச் சங்கத்தின் சார்பாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அவர்களிடம் முன்வைக்கபட்டது.

1) தொகுப்பூதிய எம் ஆர் பி செவிலியர்கள் அனைவரையும் (கோவிட் செவிலியர்கள் உட்பட) பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

2) பத்து ஆண்டுகள் காலத்தில் இல்லாத அளவில் பெரும்பாலான செவிலியர்கள் பணி நிரந்தர ஆணை வெளிப்படையாக அவரவர் சொந்த மாவட்டத்தில் வழங்கப்பட்டது போலவே, வரும் காலங்களில் பணி நிரந்தரம் செய்யப்படும் அனைத்து செவிலியர்களும் இது போன்ற பலனை அனுபவிக்க வழிவகை செய்ய வேண்டும்.

3) இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல நூறு கிமீ தொலைவில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது

இவை அனைத்தின் மீதும் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார் எனவும்  ஊரடங்கு முடிந்தவுடன் எம் ஆர் பி செவிலியர்களின் பணி நிரந்தரம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி அதன் பிறகு கண்டிப்பாக நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள், எம் ஆர் பி செவிலியர்கள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் சந்திப்பில் கூறியுள்ளார் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆரம்பம் முதல் இன்று வரை உண்மையான உழைப்பை மட்டுமே வழங்கி சொந்த செலவில் நமது செவிலியர்கள் நலனுக்காக பாடுபடும் நமது சங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எம் ஆர் பி செவிலியர்கள் நல சங்கத்தின்சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் எம் ஆர் பி செவிலியர்களுக்கான விடியல் விரைவில் வரும்  என நம்புவோம் என்று எம் ஆர் பி செவிலியர்கள் நல சங்கத்தின்சார்பாக நம்பிக்கை அளிக்கப்பட்டது

நன்றி

READ MORE  A WHITE ELEPHANT AND A FARMER

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here