ஒப்பந்த செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
தமிழக அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்த செவிலியர்கள் அனைவரும் 2015 மட்டும் 2019ஆம் ஆண்டு மெடிகல் சர்வீசஸ் ரெக்ரூட்மெண்ட் போர்டு மூலம் தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்கள் ஆவர். மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கு முதலில் ஆரம்பத்தில் ரூபாய் 7700 ஊதியமாக வழங்கப்பட்டது பின்னர் இந்த ஊதியம் 14 ஆயிரமாக உயர்த்தப்பட்டது இப்போது சுமார் 18 ஆயிரமாக இவர்கள் ஊதியம் உள்ளது பல மாவட்டங்களில் இன்னும் இந்த ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 7 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரப்படுத்த சொல்லி 2017 ஆம் ஆண்டில் ஒரு போராட்டம் செய்தார்கள் அதன் பின்பு 2021ஆம் ஆண்டு ஒரு போராட்டம் செய்தார்கள் இந்த இரண்டு போராட்டங்களின் முடிவிலும் செவிலியர்கள் பணி நிரந்தரம் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வரும் அனைத்து செவிலியர்களும் நிரந்தர படுத்துவோம் என்ற வாக்குறுதி தந்துள்ளது. தற்போதைய அரசானது தங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றி வரும் சூழ்நிலையில் செவிலியர்கள் தங்கள் கோரிக்கையான பணி நிரந்தரம் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருப்பதால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கின்றனர். இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கமானது 4/05/2022 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
ஒப்பந்த செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

தற்போது எம்ஆர்பி செவிலியர் நல சங்கமானது 10, 11, 12 ஆகிய தினங்களில் பணியில் இருந்து கொண்டு அனைவரும் தங்கள் சீருடையில் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். செவிலியர் தினமான இன்று 12/5/2022 இன்று ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் தங்கள் சீருடையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்து தங்களை எதிர்ப்பை காண்பித்துள்ளனர். மேலும் எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கமானது 12/05/2022 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒப்பந்த செவிலியர்கள் இணைத்து ஊர்வலமாக சென்று தங்களது எதிர்ப்பை தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர். செவிலியர்கள் உடன் சுமூக தீர்வு ஏற்படாத பட்சத்தில் எம்ஆர்பி செவிலியர் நல சங்கமானது ஜூன் 7ஆம் தேதி அன்று சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.