ஆண் , பெண் செவிலியர்கள் ஒதுக்கீடு முறை – எய்ம்ஸ்

0
66

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

 கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில், எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் போது, நோயாளிகளை சிறப்பாக கவனிப்பதற்காக எண்பது சதவிகிதம் பெண் செவிலியர்களையும் இருபது சதவிகிதம் ஆண் செவிலியர்களையும் நிரப்புவதற்கு ஒதுக்கீடு வழங்கிட வழிவகை செய்யப்படும் என்று செய்தி வந்துகொண்டிருக்கிறது.

TNAI KERALA BRANCH

இந்நிலையில் TRAINED NURSES ASSOCIATION OF INDIA, KERALA BRANCH ஆல் MINISTER OF HEALTH AND FAMILY WELFARE அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதம்:

அந்த கடிதத்தில் கூறி இருப்பது என்னவெனில், AIIMS ஆல் நடத்தப்பட்ட நான்காவது CENTRAL INSTITUTE BODY MEETING இல் இனி வரும் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப எண்பது சதவிகிதம் பெண்களுக்கும் இருபது சதவிகிதம் ஆண்களுக்கும் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

இந்த முடிவில் பெண் செவிலியர்கள்  தேவைப்படும் இடங்களுக்கு மட்டுமே இது பொருந்துமா அல்லது பொது மறுசீரமைப்பு கொள்கையாக உள்ளதா என்பதில் தெளிவற்ற தன்மை உள்ளது

இது ஒரு பொது விதியாக செயல்படுத்தப்பட்டால், அது மிகவும் பாரபட்சமானது ஆகவே எங்கள் சங்கம் இந்த விஷயத்தில் எங்கள் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தும்.  மேலும்  இது பாலின சமத்துவத்திற்கான நமது அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது. இந்த முடிவானது பாலின நடுநிலைமையில் செவிலியர் தொழிலை மீண்டும் அதன் கருப்பு நாட்களுக்கு அழைத்து செல்லும். எய்ம்ஸ் மருத்துவமனை இந்த பழைய முறையை அமல்படுத்துமாயின் பல தனியார் நிறுவனங்களும் இதே முறையை பின் பற்ற வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த முடிவை மாற்றி ஆண் பெண் இருவருக்கும் சம வாய்ப்பு வழங்க படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த முடிவு திரும்பப் பெறப்படாவிட்டால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறோம்..இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் நகல் உங்கள் பார்வைக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஆண் , பெண் செவிலியர்கள் ஒதுக்கீடு முறை - எய்ம்ஸ்

நன்றி

SHARE HERE
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
READ MORE  செவிலியர்களை அவமதிக்காதீர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here