புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்க நர்சுகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கோரிக்கை
நர்சுகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் திரு. செந்தில்நாதன் அவர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறை இயக்குனர் அவர்களுக்கு தமிழக அரசு மருத்துவமனைகளில் புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்குதல் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழகத்தில் இயங்கிவரும் பழமையான மருத்துவமனைகளான MMC, KMC Stanley , செங்கல்பட்டு, திருச்சி , மதுரை,தூத்துக்குடி , திருநெல்வேலி , தஞ்சாவூர் . சேலம் , கோயம்புத்தூர் போன்ற மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கை வசதி 500 லிருந்து சுமார் 3000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும், புதிது புதிதான சுகாதார திட்டங்கள் செயல்படுத்தப்படுவதோடு,Super Speciality மருத்துவமனை மற்றும் DM Institute ஆகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது, இந்நிலையில் செவிலியர் பணியிடங்களை மட்டும் உருவாக்காமல் பழைய எண்ணிக்கையினாலான சொற்ப செவிலியர்களை பணியமர்த்தி கொண்டு அனைத்து பணிகளையும் செய்ய கட்டாயப்படுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டம் Article -309 – க்கு எதிரானது.
மேற்படி பணியமர்த்துதல் விதிமுறைகள் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டு , இப்பெண் செவிலியர்களை அதிக பணி செய்ய கட்டாயப்படுத்துதல் மற்றும் பணி வரன்முறை அமல்படுத்தாமல் மனித உரிமைகள் சுரண்டல் / மீறல் போன்ற செயல்களில் தமிழக சுகாதாரத் துறை தொடர்ந்து ஈடுபடுவதும் . இவ்விடம் புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்குதல் என்பது தங்கள் துறையின் அமைப்புசார் விதிகளின் படி தாங்களே பொறுப்பாகிறீர்கள் என்பதும், கடந்த 60 ஆண்டுகளாக தங்கள் துறை இதுசார்ந்து தேவையான முழு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதும் தங்களின் மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்கிறோம் . இது சார்ந்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிக்கைமனு: பதிவிறக்கம் செய்க