சமூக வலைத்தளம் மற்றும் திரைப்படங்களில் செவிலியர்கள் மீதான பார்வை
சமூக வலைத்தளம்:
அனைவருக்கும் வணக்கம் ,கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் ஒரு சில மீம் பகிரப்பட்டு வருகிறது. அந்த மீம்களில் ஒரு செவிலியர் ஒரு நபருக்கு ஊசி போடுவது போலவும் அந்த நபர் அந்த செவிலியரை பார்ப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படம் வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் தமிழ் சினிமாவில் வந்த சில கண்ணியக் குறைவான காட்சிகளுடன் அந்த புகைப்படத்தை ஒப்பிட்டுப் செவிலியர்களை மிகவும் கண்ணியக் குறைவாக சித்தரிக்கின்றனர். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரை துச்சமென மதித்து பொதுமக்களுக்கு சேவை செய்யும் செவிலியர்களை இவ்வாறு கண்ணியக் குறைவாக சித்தரிப்பது அனைத்து செவிலியர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக chennai memes என்ற பேஸ்புக் பக்கத்தில், “NO MATTER WHERE THEY ARE OR WHAT THEY DO MEN WILL BE MEN” என்று மேலே சொன்ன புகைப்படத்தை போட்டு ஒரு மீம் வெளியிட்டிருந்தார்கள்,இதைப்பற்றி ஒரு செவிலியரிடம் கேட்கும்போது அவர் சொன்னதாவது அந்த மீமை (memes) தயாரித்தவர்களின் வேண்டப்பட்ட பெண்கள் அங்கே இருக்கும் போதும் அவர்கள் ஆண்களாகதான் இருபர்களா? ஒரு சகோதரனாகவோ, ஒரு தந்தையாகவோ அல்லது அந்தப் பெண்ணிற்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க மாட்டார்களா என்று தனது ஆதங்கத்தை அந்த செவிலியர் வெளிப்படுத்தினார். மேலும் மிகவும் பிரபலமான இதுபோன்ற பேஸ்புக் பக்கங்களில் இவ்வாறு வருவது மிகவும் வேதனைக்குரியது என்றும் தெரிவித்தார்.
மேலும் சில கண்ணியக் குறைவாக வெளியிடப்பட்ட மீம்களை இங்கே கொடுத்துள்ளோம் பொதுமக்கள் அதைப் பார்த்து அதை தயாரித்த அவர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.




தமிழ் திரைப்படங்கள்:
பல தமிழ் திரைப்படங்களில், அதாவது இதுவரை வந்த தமிழ் திரைப்படத்தில் பல திரைப்படங்களில் செவிலியர்களை கண்ணியமாக காட்டுவதுபோல் இல்லை. மாறாக கண்ணிய குறைவாகவே காண்பிக்கின்றனர்.
முற்போக்குவாதி என்று தங்களை அடையாளப்படுத்திக் இருக்கும் பல நடிகர்களின் படங்களில் கூட செவிலியர்களை கண்ணியக் குறைவாக காண்பிக்கும் காட்சிகள் மிக இயல்பாகவே தமிழ் சினிமாவில் இருக்கின்றது. இனிவரும் காலங்களில் இயக்குனர்களும் நடிகர்களும் தங்களின் திரைப்படத்தில் செவிலியர்களை கண்ணியக் குறைவாக காண்பிப்பதை தவிர்க்க வேண்டும் என்று செவிலியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
பொதுவாக ஆண்களுக்கு செவிலியர்களை பார்த்தால் ஒரு மரியாதையும் அன்பும் ஏற்படுவது இயல்பு என்று நம்பப்படுகிறது. ஆனால் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற கண்ணியக் குறைவாக காட்டப்படும் புகைப்படங்களால் பலருக்கு இவ்வாறு செய்வது தவறு இல்லை இது இயல்புதான் என்று தோன்ற வாய்ப்பு இருக்கிறது. மேலும் நமது பொதுப்புத்தியில் செவிலியர்கள் பெண்கள் மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருப்பதால் இந்த எண்ணமானது அனைத்து பெண்கள் மேல் திரும்பவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இது போன்ற மீம்களை தயாரிப்பவர்கள் செவிலியர்களை வக்கிர எண்ணத்தோடு பார்க்காமல் ஒரு சகோதரியாக பார்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி